Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

சமுத்திரக்கனி வெளியிட்டார் ‘சிவப்பு நட்சத்திரங்கள்’ படத்தின் தலைப்பு!

#SivappuNatchathirangal #Samuthirakani #TamilCinema #Kollywood #LeehariPictures #MovieAnnouncement #TamilMovieNews #DalhousiePrabhu #Varsha #Ponvannan #NewMovieUpdate #CinemaNews #தமிழ்சினிமா #சிவப்புநட்சத்திரங்கள் #சமுத்திரக்கனி #திரைப்படசெய்திகள் #புதியதிரைப்படம்

அக்டோபர் 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

லீஹரி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சிவப்பு நட்சத்திரங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் தலைப்பை நடிகர் சமுத்திரக்கனி இன்று தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள் மனிதகுலத்தின் பசியைப் போக்குவதற்காகவே பயன்பட வேண்டும்; அவற்றைப் பணக்காரர்கள் பதுக்கி வைத்து செயற்கையான பஞ்சத்தை உருவாக்குவதற்காக அல்ல என்ற சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

காதல், புரட்சி, அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய அம்சங்களுடன், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளையும் மனித வாழ்வின் போராட்டங்களையும் இப்படம் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் டல்ஹௌசி பிரபு கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். பொன்வண்ணன் சமூக அரசியல் தலைவராகவும், OAK சுந்தர் பொலிஸ் ஆணையாளராகவும், பழ. கருப்பையா நீதிபதியாகவும் நடிக்கின்றனர். மேலும், சித்தார்த், தீரன், பாலமுருகன் மற்றும் டெல்டா வீரா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி டல்ஹௌசி பிரபு இயக்குகிறார். ஒளிப்பதிவை PK மேற்கொள்ள, தீபன் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். சண்டைக் காட்சிகளை கனல் கண்ணனும், படத்தொகுப்பை செந்தில் வீராவும் கவனிக்கின்றனர். நடன இயக்குநராக தினேஷ் மாஸ்டர் பணியாற்றுகிறார்.

லீஹரி பிக்சர்ஸ் சார்பில் B. சின்னத்தம்பி தயாரிக்கும் இப்படத்திற்கு கர்ணா மற்றும் டாக்டர் தினேஷ் இணைத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.

‘சிவப்பு நட்சத்திரங்கள்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் குறித்து ஐ.நா வதிவிடப் பிரதிநிதியுடன் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கலந்துரையாடல்

செப்டம்பர் 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்க உத்தியோகபூர்வ தீர்மானமில்லை – ஹர்ஷன நாணயக்கார

ஜூலை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரஜீவ் அமரசூரியவுக்கு எதிரான கருத்து: எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய இன்று கூடுகிறது சட்டத்தரணிகள் சங்கம்

ஜூலை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய தொழிநுட்ப முறைக்கு அரச வேதனை முறைமை மாற்றப்படவுள்ளது!

ஆகஸ்ட் 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube