இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 (T20) கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா களத்தடுப்பில் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நடப்பு ஆண்டில் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக பிடிகளை (Catches) எடுத்த களத்தடுப்பு வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் மூன்று ஓவர்களுக்குள் இரண்டு முக்கிய பிடிகளை எடுத்ததன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்தோனேசிய வீரர் டேனில்சன் ஹாவோ 2025ஆம் ஆண்டில் 25 பிடிகளை எடுத்து சாதனை படைத்திருந்தார். அந்தச் சாதனையைத் திலக் வர்மா முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
