உயிரிழந்த காவன்திஸ்ஸ யானைக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி, பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் நடைபெற்றது.
இதன்போது, “விலங்குகளைக் கொன்றால் நரகத்துக்குச் செல்வீர்கள்”, “தந்தங்களைப் பெறுவதற்காகத்தான் இப்படிச் செய்தீர்களா?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
காவன்திஸ்ஸ யானையின் உயிரிழப்புக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், நாட்டின் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
