லங்கா ஐஓசி நிறுவனம் ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் புதிய விலை லீற்றருக்கு 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, குறித்த ரக பெட்ரோலைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களின் எரிபொருள் செலவு அதிகரிக்கவுள்ளது.
