நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, 8 மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Contents
இதன்படி, மஞ்சள் நிறத்தில் முதலாம் நிலை எச்சரிக்கையும், அம்பர் நிறத்தில் இரண்டாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
🟡 முதலாம் நிலை எச்சரிக்கை – விழிப்புடன் இருக்கவும்
- காலி மாவட்டம்: தவலம
- கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
- களுத்துறை மாவட்டம்: மதுராவல, பேருவளை, மில்லனிய, ஹொரணை
- கண்டி மாவட்டம்: உடதும்பர, பஸ்பாகே கோரளை, உடபலாத்த, உடுநுவர
- கேகாலை மாவட்டம்: கேகாலை, மாவனெல்ல, தெரணியகல, வரகாப்பொல, அரநாயக்க, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை
- குருநாகல் மாவட்டம்: நாரம்மல, குருநாகல்
- இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, ஓபநாயக்க
🟠 இரண்டாம் நிலை எச்சரிக்கை – எச்சரிக்கையுடன் இருக்கவும்
- களுத்துறை மாவட்டம்: வளல்லாவிட்ட, புலத்சிங்ஹல
- கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, கலிகமுவ
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை, நோர்வூட்
- இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல, எலபாத்த, அயகம, நிவித்திகல
🚨 பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
மண்சரிவு அபாயம் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பின்வரும் ஆபத்துக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும்:
- நிலத்தில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் ஏற்படுதல்.
- மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வடைதல்.
- ஊற்று நீர் திடீரென கலங்கலாக மாறுதல்.
தொடர்ச்சியான மழை பெய்யும் பகுதிகளில் வசிப்போர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
