சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கல்வி வலயங்களைச் சேர்ந்த 26 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தொடர்மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
