வங்காள விரிகுடாவில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘அர்னாப்’ சூறாவளியாக வலுவடைந்துள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் அல்லது அதற்கும் அதிகமாக வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூறாவளி மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள படகுகள் சூறாவளியின் மையப்பகுதி மற்றும் அதன் நகர்வுப் பாதையிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்கள் வானிலை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
