Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இன்று இலங்கை–பாகிஸ்தான் மோதல்!

அக்டோபர் 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று (27) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள கடாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, இறுதிப் போட்டிக்கான தகுதியை ஏற்கனவே உறுதி செய்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் பாகிஸ்தான் 37 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.

அந்தப் போட்டியில் சல்மான் அலி ஆகா 90 பந்துகளில் 107 ஓட்டங்களைப் பெற்றதுடன், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். பந்துவீச்சில் அணித்தலைவர் ஷஹீன் ஷா அப்ரிடி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இன்றைய போட்டி இலங்கை அணிக்கு தனது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் தொடரில் முக்கியமான வெற்றியைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

இந்தத் தொடரின் அடுத்த போட்டியில் இலங்கை அணி ஒக்டோபர் 29ஆம் திகதி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

எங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மலையக காணி உரிமைக்காக கொழும்பு நோக்கி நடக்கும் 7 வயது சிறுவன்!

மே 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்களின் இணையப் பாதுகாப்பிற்காக தேசிய வேலைத்திட்டம்: பிரதமர் ஹரிணி!

ஜூலை 22, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் – இலங்கை ரக்பி அணியை பின்தள்ளிய சீனா!

அக்டோபர் 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக இந்திய வீட்டுத்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு!

ஜூன் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube