பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் தொடக்கத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க விலகியுள்ளார்.
இடது தொடைத் தசைநார் காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாகக் குணமடையாத காரணத்தினால் இந்தத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருக்குப் பதிலாக லஹிரு உதாரவை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு நியமித்துள்ளது.
லஹிரு உதார ஏற்கனவே இலங்கை ஒருநாள் சர்வதேச அணியின் ஒரு பகுதியாகப் பாகிஸ்தானில் தங்கியுள்ள நிலையில், தற்போது டெஸ்ட் அணியிலும் இணைக்கப்பட்டுள்ளார்.
