Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் மதுப் பரிசோதனை, போதைப்பொருள் சோதனை!

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு திடீர் மதுப் பரிசோதனை மற்றும் போதைப்பொருள் சோதனைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றத்திற்கான குழு உறுப்பினர் சிதத் வெத்தமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், வீரர்களின் உடற்தகுதி, ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, வீரர்களின் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கண்காணிப்பதற்காக வாரந்தோறும் தோல் மடிப்பு அளவீட்டுப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

வீரர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதற்காக உணவியல் நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்திலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போதும் வீரர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் கண்காணிக்கப்படுவதுடன், அவர்கள் தங்கும் ஹோட்டல்களுக்கும் உணவுத் திட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தொழில்முறை ஒழுக்கம் தொடர்பிலும் வீரர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சிதத் வெத்தமுனி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் வீரர்களின் உடற்தகுதி மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தி, சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கான சூழலை உருவாக்குவதே நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ராமர் பாலத்துடன் தொடர்புடைய எட்டு மணல் திட்டுகளை பார்வையிட அனுமதி

செப்டம்பர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொலைதூரத் தனியார் பஸ்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செப்டம்பர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் அமைப்புகள் இடம்பெற்றுள்ளது

செப்டம்பர் 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு!

ஏப்ரல் 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube