Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Breaking Newsஇலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கோரிக்கை: பெற்றோரின் உடல்நிலையை முன்வைத்த சட்டத்தரணி!

அக்டோபர் 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு மனிதாபிமான அடிப்படையில் பிணை வழங்குமாறு, அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கிரிஷ் (Krrish) பரிவர்த்தனை வழக்குடன் தொடர்புடைய நாமல் ராஜபக்ஷவின் புதிய பிணை மனு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அலி சப்ரி இவ்விடயங்களை முன்வைத்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் 81 வயதுடைய தந்தை கடுமையான மனச்சோர்வு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அண்மையில் வீடு திரும்பியதாகவும், அவரது தாயார் தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஒக்டோபர் 27ஆம் திகதி மாலை திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தின் மூத்த மகன் என்ற வகையில் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நாமல் ராஜபக்ஷவுக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அலி சப்ரி, இந்தச் சூழ்நிலையை விசேட மனிதாபிமானக் காரணமாகக் கருதி பிணை வழங்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற அரசியலமைப்புச் சட்டக் கோட்பாட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசாங்க அமைச்சர் ஒருவர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், புதிய பிணை மனு தொடர்பான ஆவணங்கள் தமக்குக் கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தனது நிலைப்பாட்டை முன்வைக்கக் கால அவகாசம் கோரியுள்ளது. அதேவேளை, சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், புதிய பிணை மனு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை ஒக்டோபர் 28ஆம் திகதி முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ தற்போது கிரிஷ் பரிவர்த்தனை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் விசாரணைக்காக நாமல் ராஜபக்ஷவை ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

மரியசெல் குணதிலக்க காலமானார்!

ஜூலை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுவசெரியவுக்கு 10 ஆண்டுகள் நிறைவு!

ஜூலை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மேயர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

ஜூன் 24, 2026
இலங்கைவிளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!

ஜூலை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube