Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு வாய்ப்பு!

#இலங்கைமாணவர்கள் #தென்கொரியா #கல்விவாய்ப்பு #வேலைவாய்ப்பு #உயர்கல்வி #தொழிற்பயிற்சி #மாணவர்பரிமாற்றம் #அமைச்சரவையங்கீகாரம் #இலங்கைசெய்திகள் #கொரியாவில்வேலை #கல்விச்செய்திகள் #SriLankaNews #SouthKorea #StudentExchange #HigherEducation #JobOpportunities #VocationalTraining #StudyInKorea #SriLankanStudents #BreakingNews #EducationNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மாணவர்களுக்குத் தென் கொரியாவில் உயர்கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென் கொரியாவின் வெங்க்சின் (Changshin) பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிட்டிருந்தது.

எனினும், ஒப்பந்தத்தில் காணப்பட்ட சில ஏற்பாடுகள் தொடர்பான சிக்கல்களால் அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, இலங்கை மற்றும் தென் கொரியாவின் ஐந்து பங்காளி நிறுவனங்களை உள்ளடக்கி புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமும் தொழிற்பாட்டுப் பணிச்சட்டகமும் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தெரிவுசெய்யப்படும் இலங்கை மாணவர்களுக்குத் தென் கொரியாவின் வெங்க்சின் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கப்படுவதுடன், அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் நீண்டகாலம் வசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தொழில் அமைச்சு, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம், தென் கொரியாவின் சம்பந்தப்பட்ட மாகாணம், சசோன் வணிக மற்றும் கைத்தொழில் பேரவை மற்றும் வெங்க்சின் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

ஜூலை 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இன்று 7 என்புகூடுகள் அகழ்வு!

ஜூன் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் மூலம் பண மோசடி – CERT எச்சரிக்கை

அக்டோபர் 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவுக்குச் செல்லும் அமெரிக்கத் தூதர் – உக்ரைன் போர் தொடர்பில் புதிய பேச்சுவார்த்தை முயற்சி

அக்டோபர் 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube