Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

38 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வு

#தொடரும்_வெள்ளஅபாயம் #இலங்கை #வெள்ளஎச்சரிக்கை #நீர்த்தேக்கங்கள் #வான்பாய்வு #நீர்ப்பாசனத்திணைக்களம் #வெள்ளப்பெருக்கு #மழைஎச்சரிக்கை #இலங்கைசெய்திகள் #அவசரசெய்தி #SriLankaNews #FloodAlert #FloodRisk #Reservoirs #WeatherAlert #BreakingNews

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 38 மத்திய மற்றும் பெரிய அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தெதுரு ஓயா, இராஜாங்கனை, இங்கினிமிட்டிய, யான் ஓயா மற்றும் உஸ்கல சியம்பலன்கமுவ உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களில் வான்பாயும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாரிய வெள்ளப்பெருக்குக்கான அபாயம் அவதானிக்கப்படவில்லை என்றாலும், பல ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்த நிலையிலேயே காணப்படுகிறது.

களனி கங்கை மற்றும் களு கங்கையின் மேல்நிலைப் பகுதிகளில் 40 முதல் 60 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், நில்வளா, கிங், களு மற்றும் களனி ஆறுகளை அண்டிய சில தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை தொடர்கிறது.

குறிப்பாக மாத்தறை, பத்தேகம, களுத்துறை, கம்பஹா, கடான மற்றும் ஜா-எல உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்றும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்டம் மீண்டும் உயரக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, நீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீராடுதல், நீர் விளையாட்டுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆபத்தான செயற்பாடுகளைத் தவிர்த்து, அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மோடியை சந்திக்கும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

மே 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தம்பகல்லவில் புதையல் தோண்டிய நபர் உபகரணங்களுடன் கைது!

ஜூன் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹிந்தானந்தவுக்கு எதிரான தரமற்ற உர இறக்குமதி வழக்கு ஒத்திவைப்பு

ஆகஸ்ட் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

செப்டம்பர் 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube