பத்தேகம, ஹல்பதொட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்த இருவர் மீது கார் ஒன்றில் வந்த சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் வீட்டில் இருந்த இருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பச்சூடு தொடர்பான CCTV காணொளியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
