எயார்பஸ் (Airbus) வழக்கில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினமும் நாமல் ராஜபக்ஷவை சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
