Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஹர்மன்பிரீத் கவுர் தனது தலைவி பதவியில் இருந்து விலகல்

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்திய மகளிர் அணிக்கு உலகக் கிண்ணத்தை வென்றுகொடுத்த ஹர்மன்பிரீத் கவுர், தனது தலைவி பதவியில் இருந்து விலகுவதாக இன்று (06) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சகலத் துறைக்குமான தலைவி பதவியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையுடன் இடம்பெற்ற முக்கிய ஆய்வுக்கூட்டத்துக்குப் பின்னர், சமூக வலைதளப் பதிவொன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனது இந்த தீர்மானம் தொடர்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனது இந்த முடிவு எளிதானதல்ல , பல ஆண்டுகளின் நினைவுகள், உணர்வுகள் மற்றும் தியாகங்களுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன்”.

எனினும் ஒரு வீராங்கனையாக இந்திய அணிக்குத் தொடர்ந்து முழுமையான பங்களிப்பை வழங்குவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் பல முக்கிய போட்டிகளை வெற்றிகொண்டுள்ளது, பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

அதில் மிகவும் முக்கியமாக , இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவி என்ற பெருமையை அவர் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அத்துடன் இந்த வருத்திற்கான (2026 ) ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்ததுடன், பல சர்வதேச தொடர்களிலும் வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஹர்மன்பிரீத் கவுரின் விலகலைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணியின் அடுத்த தலைவி யார் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இப்போதைய துணைத் தலைவியான ஸ்மிருதி மந்தனா அடுத்த தலைவியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், அடுத்த தலைவி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறையில் மீன் விற்பனையில் மோசடி – மக்கள் விசனம்

செப்டம்பர் 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ உதவி; ஈரானுக்கு அதிநவீன கட்டுப்பாட்டு விமானம்!

ஜூலை 14, 2026

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மன்னார் கிளை வைபவரீதியாக திறந்து வைப்பு

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

935,000 போதை மாத்திரை மற்றும் டிங்கி படகு ஒன்றுடன் ஒருவர் கைது!

ஜூலை 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube