அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (28) வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவல்களின்படி, அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 327.99 ரூபாயாகவும், விற்பனை விலை 337.00 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.77 ரூபாயாகவும், விற்பனை விலை 336.81 ரூபாயாகவும் காணப்பட்டது.
இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் இரண்டும் அதிகரித்துள்ளதுடன், இலங்கை ரூபாயின் பெறுமதி டொலருக்கு எதிராகச் சற்றுக் குறைந்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் மாற்று விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.
