சீரற்ற வானிலை காரணமாக இலங்கையின் பல மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (28) மாலை 4 மணி முதல் நாளை (29) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டம் 2 – அவதான நிலை (செம்மஞ்சள்)
கீழ்வரும் பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல
- களுத்துறை மாவட்டம்: புளத்சிங்ஹல, தொடங்கொட
- கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, அரநாயக்க
- நுவரெலியா மாவட்டம்: நோர்வூட், அம்பகமுவ கோரளை
- இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, ஓபநாயக்க, குருவிட்ட, அயகம, எலபாத, பெல்மடுல்ல
மட்டம் 1 – எச்சரிக்கை நிலை (மஞ்சள்)
பின்வரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு மாவட்டம்: சீத்தாவக, பாதுக்கை
- காலி மாவட்டம்: நெலுவ, எல்பிட்டிய, தவலம, நியாகம, கரந்தெனிய
- களுத்துறை மாவட்டம்: பேருவளை, மில்லனிய, அகலவத்தை, மதுராவல, ஹொணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மதுகம, இங்கிரிய
- கண்டி மாவட்டம்: உடபலாத, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடுநுவர, கங்க இஹல கோரளை
- கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை, புலத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியாகலை
- குருநாகல் மாவட்டம்: குருநாகல்
- மாத்தறை மாவட்டம்: கொடபொல, பிடபெத்தர
- நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு
- இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, கொடகவெல, எஹெலியாகொடை, பலங்கொடை
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்போர் வானிலை நிலவரம் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மண்ணில் வெடிப்புகள் ஏற்படுதல், பாறைகள் சரிந்து விழுதல், நிலம் தாழிறங்குதல் அல்லது வழக்கத்திற்கு மாறாக நீர்வரத்து அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
