PHP நிரலாக்க மொழியில் கண்டறியப்பட்ட இரண்டு முக்கிய பாதுகாப்புக் குறைபாடுகளைத் தொடர்ந்து, பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தமது இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்கான பாதுகாப்புப் புதுப்பிப்புகளை PHP Foundation வெளியிட்டுள்ளதுடன், அவற்றை உடனடியாகச் செயல்படுத்த முடியாத நிறுவனங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை இணையத்தளங்களை முடக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பின்லாந்து அரசாங்கத்தின் சில இணையச் சேவைகள், நெதர்லாந்தின் இணையப் பாதுகாப்பு அமைப்பின் இணையத்தளம் மற்றும் எடின்பரோ நகர சபையின் இணையத்தளம் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள் மூலம் ஹேக்கர்கள் கணினிக் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி, தரவுகளை அணுகவும் தீங்கிழைக்கும் மென்பொருட்களை நிறுவவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, PHP பயன்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்துமாறும், பழைய பதிப்புகளைப் பயன்படுத்துவோர் புதிய பதிப்புகளுக்கு மேம்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
