நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (29) வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை (30) பிற்பகல் 4 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2ஆம் நிலை அம்பர் எச்சரிக்கையும், காலி, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 1ஆம் நிலை மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
