இலங்கையில் நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு நிதி, சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான TIN சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட நிதி மற்றும் நிர்வாகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் TIN சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
இந்த நடைமுறை வரி நிர்வாகத்தை முறைப்படுத்துவதையும் வரி செலுத்துவோர் தொடர்பான தகவல்களைச் சீரமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
