இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள விரும்பும் இலங்கையர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் புதிய மாற்றம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அரசாங்கங்களுக்கு இடையிலான (G2G) திட்டத்தின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் என இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, உரிமம் பெற்ற தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் ஊடாக ஆட்சேர்ப்பு செய்வது 2026 டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும்.
புதிய ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தெரிவு அளவுகோல்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதாகக் கூறி தனிநபர்கள் அல்லது முகவர் நிறுவனங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
