புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் பொய்யான மற்றும் புனையப்பட்ட தகவல்கள் பரப்பப்படுவதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைச்சரின் ஊடகச் செயலாளர் குணரத்ன விக்கிரமதிலக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவரால் இவ்வாறான போலித் தகவல்கள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அமைச்சர் புத்தசாசனத்தையோ அல்லது அதற்குச் சொந்தமான சொத்துக்களையோ அவமதிக்கும் வகையில் ஆதாரமற்ற தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குறித்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்துள்ள அமைச்சு, திட்டமிட்டு இவ்வாறான தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
