ஐரோப்பிய குளிர்கால சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு, இலங்கைக்கான விமான சேவைகளை மூன்று விமான நிறுவனங்கள் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, ரஷ்யாவிலிருந்து மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகள் நாளை மறுதினம் (நவம்பர் 2) ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்தச் சேவைகளை Azur Air நிறுவனம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் இலங்கைக்கான விமானப் போக்குவரத்தை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புதிய விமான சேவைகள் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதுடன், நாட்டின் சுற்றுலாத்துறைக்கும் விமானப் போக்குவரத்துத் துறைக்கும் ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
