Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் – பாதுகாப்பு வளையத்திற்குள் அமிதாப் பச்சன்!

நவம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொலிவூட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள தனது இல்லமான ஜல்சா (Jalsa) வீட்டிற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள அமிதாப் பச்சன், நேற்று (நவம்பர் 1) வழக்கம்போல் ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.

எனினும், இம்முறை அவர் வழக்கத்திற்கு மாறாக குண்டு துளைக்காத கண்ணாடியால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைக்குள் நின்று ரசிகர்களைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அவரது மகன் அபிஷேக் பச்சனும் உடனிருந்ததுடன், தந்தையின் அருகில் நின்று பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கவனித்துள்ளார். அப்பகுதியில் பொலிஸாரும் பாதுகாப்புப் பணியாளர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் அமிதாப் பச்சனின் இல்லத்தை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டல் மின்னஞ்சல் ஒன்று அனுப்பப்பட்டதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும், ஒக்டோபர் 18ஆம் திகதி மும்பையின் ஜூஹு பகுதியில் நடிகர் டைகர் ஷெராஃப் பயணித்த காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும் பொலிவூட் திரையுலகில் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளது.

இந்தப் பின்னணியிலேயே அமிதாப் பச்சனின் ரசிகர் சந்திப்பின்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அக்டோபர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!

ஜூன் 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விகாரமஹாதேவி பூங்காவில் சூனிய வழிபாடு!

அக்டோபர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

அக்டோபர் 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube