காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், தெற்கு கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கான் யூனிஸ் பகுதியில் ஆயுதக் குழுவினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளை, காசா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக எந்தக் கருத்தும் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே அமுலில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. இதனால் காசா பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது
