லாப் (LAUGFS) நிறுவனம் சந்தைக்கு போதியளவு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் தாமதித்து வருகின்ற நிலையில், அதற்குப் பதிலாக லிட்ரோ (Litro) சிலிண்டர்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் உணவுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இன்று (02) அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
லாப் நிறுவனம் போதியளவு எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்காததால், சந்தையில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் லாப் சிலிண்டர்களைப் பயன்படுத்திய பல நுகர்வோர் லிட்ரோ சிலிண்டர்களுக்கு மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக லிட்ரோ எரிவாயுவுக்கான கேள்வி வழக்கத்தைவிட அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், லிட்ரோ நிறுவனம் இன்று 3,900 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்துள்ளது.
மேலும், லாப் சிலிண்டர்களுக்குப் பதிலாக லிட்ரோ சிலிண்டர்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் சட்ட ஆலோசனை பெறுவதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தக அமைச்சு சட்டமா அதிபர் திணைக்களத்தை நாடவுள்ளது
