பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடது தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாகக் குணமடையாத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக லஹிரு உதார இலங்கை டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 9ஆம் திகதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது போட்டி நவம்பர் 17ஆம் திகதி லாகூரிலும் நடைபெறவுள்ளது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தத் தொடர் இலங்கை அணிக்கு முக்கியமானதாக அமையவுள்ளது.
