Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரப்போவதில்லை – கெமுனு விஜேரத்ன!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டணத் திருத்தத்துக்கான விலைச் சூத்திரத்தின்படி, கட்டண உயர்வுக்கான எரிபொருள் விலை மாற்றம் 4 சதவீதத்தை எட்டவில்லை என்பதால் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் அடிப்படையில் டீசல் விலை அதிகரித்துள்ளதால் பேருந்து சேவைகளை நஷ்டத்துடன் முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, குறுகிய தூரப் பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 1,000 ரூபாவும், நீண்ட தூரப் பேருந்து சேவைகளில் நாளொன்றுக்கு சுமார் 2,000 ரூபாவும் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்டணத் திருத்தத்துக்கான நிர்ணயிக்கப்பட்ட 4 சதவீத வரம்பு எட்டப்படாததால், தற்போதைய நிலையில் கட்டண உயர்வைக் கோர முடியாது எனவும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

ஆகஸ்ட் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியசாலையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் கைது

ஆகஸ்ட் 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

300 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ஜூன் 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரின் வெற்றிக்கு ட்ரம்ப் வாழ்த்து!

நவம்பர் 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube