அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெற்ற வெற்றிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் இந்த வெற்றிக்காக 11 ஆண்டுகளாகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தேர்தல் முடிவுகளைத் தனது தலைமைத்துவத்துக்கு எதிரான பின்னடைவாகக் கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது ஜனாதிபதி பதவிக் காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகள் அமெரிக்க வரலாற்றிலேயே மிகச் சிறந்தவை என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஊடகமான ஃபொக்ஸ் நியூஸுக்கு வழங்கிய கருத்திலேயே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
