இலங்கையின் இளம் டேபிள் டென்னிஸ் வீரர் தாவி சமரவீர, ஸ்லோவாக்கியாவில் நடைபெற்ற WTT Youth Contender 2026 போட்டியில் 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஸ்லோவாக்கியாவின் செனெக் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் பெற்ற வெற்றி, அண்மையில் இத்தாலியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து கிடைத்துள்ள மற்றுமொரு சர்வதேச சாதனையாகும்.
இளம் வயதிலேயே சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வரும் தாவி சமரவீரவின் சாதனை இலங்கை விளையாட்டுத்துறையின் கவனத்தைப் பெற்றுள்ளது.
