முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மனம்பேரி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள, அரிசி லொறி ஒன்றைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து, வழக்கின் தீர்ப்பு அறிவிக்கும் நடவடிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி வரை இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
