கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
