அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை சிறிய மாற்றத்துடன் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.10 ரூபாவாக மாற்றமின்றிக் காணப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 337.14 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று 337.13 ரூபாவாகச் சிறியளவில் குறைந்துள்ளது.
இதேவேளை, வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
