Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் விடுதலைக்கான போராட்டம்: சந்தேகநபர்களைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

நவம்பர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியவர்களைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா குருந்துவத்தை காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், போராட்டத்தின்போது பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றச் சென்ற கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பூங்கா பொறுப்பதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குருந்துவத்தை காவல்துறையினர் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகளைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பரிசோதித்து, அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, போராட்டம் நிறைவடைந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்ததைத் தொடர்ந்து, அதுதொடர்பான இடைக்கால நீதிமன்ற உத்தரவு தொடர்பான முறைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்

ஜூலை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சியின் தீர்வு நம்பிக்கையில்லா பிரேரணை!

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்த அஜித் நிவார்ட் கப்ரால்!

செப்டம்பர் 11, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்யாவின் இராணுவ உதவி; ஈரானுக்கு அதிநவீன கட்டுப்பாட்டு விமானம்!

ஜூலை 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube