தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கொள்முதல் செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் இன்று (03) முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் ஊடாக விநியோகிக்கப்படுகின்றன.
முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதிக்குள் தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளுக்குச் சென்று இலவச வேட்டி, சேலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நேரில் செல்ல வேண்டும் எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழான விநியோக நடவடிக்கைகள் எவ்வித தாமதமுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
