ஜனாதிபதி ஷிரந்தி ராஜபக்ஷ மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த முன்பிணை கோரிக்கை இன்று திங்கட்கிழழை (12) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அவர் மாளிகாகந்த நீதிமன்றத்தில் இந்த முன் பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த முன் பிணை மனு கடந்த 06 ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இது தொடர்பில் இன்றைய (12) தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை அறிக்கையிடுமாறு நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
