Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உகாண்டாவில் பாடசாலை பஸ் விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு!

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கப்சோர்வா (Kapchorwa) மாவட்டத்தின் செக்வாடிட் (Chekwatit) கிராமத்திற்கு அருகில் கடந்த வியாழக்கிழமை (16) இந்த விபத்து இடம்பெற்றதாக உகாண்டா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘கிங் டேவிட் ஜூனியர்’ பாடசாலைக்குச் சொந்தமான பஸ், சிபி நீர்வீழ்ச்சிக்கான கல்விச் சுற்றுலாவை முடித்துவிட்டு தலைநகர் கம்பாலா நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் வீதியை விட்டு விலகி பெரிய பாறையில் மோதிய பின்னர் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 28-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர்களின் பெயர் மற்றும் வயது விபரங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில், பாடசாலையின் நிறுவனர் மற்றும் அதிபரும் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் பாடசாலை சுற்றுலா மற்றும் கல்விப் பயணங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உகாண்டா அரசு அறிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

iPhone 18 pro series செப்டம்பர் 9 அறிமுகம்

புரட்டாதி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எல்நினோ தாக்கத்தினால்  49 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்வர்

ஆவணி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

குழந்தைப் பெற்றுக்கொள்ள அமெரிக்கா சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும் !

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் இதுவரை 437 என்புகூடுகள் அடையாளம்

ஆடி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube