இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவருடன், இலங்கை கிரிக்கெட் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் தங்களது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இந்த கடிதங்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு உத்தியோகப்பூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

