Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 மாதங்களில் பெருமளவான போதைப்பொருள் சுற்றிவளைப்பு!

ஆடி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் ‘முழு நாடும் ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, இலங்கை கடற்படை கடல் எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ், முப்படைகள், இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில், 256.200 கிலோகிராம் கொக்கேன், 1,080.894 கிலோகிராம் ஹெரோயின், 667.695 கிலோகிராம் கேரள கஞ்சா, 590.806 கிலோகிராம் ஐஸ் மற்றும் 56.091 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில், கடத்தல்காரர்களுக்கு எதிரான கடல்சார் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், போதைப்பொருளற்ற பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் முயற்சியில் கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வட்டவானில் முச்சக்கர வண்டி விபத்து!

ஆடி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிப்பிட்டியவில் தீவிபத்து – 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஆனி 3, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து கடைகளில் பணம் கோரிய குழு தொடர்பில் புகார்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube