Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சைபர் மோசடி என்பதால் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது – அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல விடயங்களை வெளிப்படுத்த முடியாது. இது சைபர் மோசடி என்பதால் தற்போதைய நிலையில் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பொறுப்பேற்குமாறும் குறிப்பிட முடியாது என தொழில் அமைச்சரும், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

திறைசேரியால் வெளிநாட்டு கடன் வழங்குநர் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை சைபர் குற்றமாகும் என அரசாங்க நிதி பற்றிய குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கி விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

வெளிநாட்டு கடன் முகாமைத்துவ திணைக்களம் புதிதாக நியமிக்கப்பட்ட காலப்பகுதியின் போது பணிக்குழாமினர் இலங்கை மத்திய வங்கியில் பயிற்சியில் இருந்துள்ளார்கள்.

இக்காலப்பகுதியில் தான் அந்த மோசடி இடம்பெற்றுள்ளது. இது வெளிநாட்டு கடன் வளங்கள் திணைக்களத்தின் குறைப்பாடு என்று குறிப்பிட முடியாது.

இந்த சைபர் மோசடி குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் பல விடயங்களை வெளிப்படுத்த முடியாது. இது சைபர் மோசடி என்பதால் தற்போதைய நிலையில் எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது. பொறுப்பேற்குமாறும் குறிப்பிட முடியாது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை பாடசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனை குழாய் வெடித்ததில் 4 மாணவிகள் காயம்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் 4.75 மில்லியன் பயணிகளை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் கையாண்டுள்ளது

ஆடி 15, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கொட்டகலையில் இலவச கருத்தரங்கு – 140க்கும் மேற்பட்ட உயர்தர மாணவர்கள் பங்கேற்பு!

ஆனி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube