Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

Emergency Law | Srilanka | One Month | Quick Tamil News

சித்திரை 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்துக்கமைய சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, நீர் விநியோகம், வங்கி கட்டமைப்பு உட்பட 15 சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.எஸ்.குமநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (29) புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுக் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான(40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய, அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

டித்வா புயல் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட அனர்த்த நிலையில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் பொருட்டு 2025.11.29 ஆம் திகதியன்று ஜனாதிபதியால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய தேயிலை அறுவடை விழா 2026

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோதுமை மா விலை அதிகரிப்பு!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2.5 மில்லியன் மோசடி தொடர்பில் திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும அரசாங்க நிதி குழுவில் முன்னிலை!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியா மாநகர சபை தொடர்பான இறுதி தீர்ப்பு!

ஆனி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube