பணம் சம்பாதிக்கப்பட்ட விதத்தை உறுதிப்படுத்த முடியாத 2 கோடியே 70 இலட்சம் ரூபாவுடன் காரில் பயணித்த இருவர் கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பார்க் வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்த 54 மற்றும் 59 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட 2 கோடியே 70 இலட்சம் ரூபா சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டதா என்பது தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
