Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஹிட்லரின் வீடு காவல் நிலையமாக மீள திறப்பு

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆஸ்திரியாவின் பிரௌனாவ் ஆம் இன் (Braunau am Inn) நகரில் உள்ள அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு, பல ஆண்டுகளாக நீடித்த விவாதங்களுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக காவல் நிலையமாக மீளத் திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடம் வலதுசாரி தீவிரவாதிகளின் வழிபாட்டுத் தளமாக மாறுவதைத் தடுப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய வரலாற்றுச் சின்னத்தின் குறியீட்டுத் தன்மையை மாற்றுவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.

கட்டிடத்தின் வெளியே “Police” என்ற பெயர்ப்பலகை மட்டுமே காணப்படுவதுடன், அருகில் “மீண்டும் பாசிசம் வேண்டாம்” என்ற வாசகத்துடன் நினைவுக் சின்னமும் நிறுவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1889ஆம் ஆண்டு பிறந்த ஹிட்லர், அந்த வீட்டில் சில வாரங்கள் மட்டுமே வசித்திருந்தாலும், பின்னர் அந்தக் கட்டிடம் நாசி ஆதரவாளர்களின் முக்கிய அடையாளமாக மாறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒஸ்திரியாவின் உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கார்னர், இந்தக் கட்டிடம் இனி ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பொதுமக்களுக்கான சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் இடமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

எனினும், வரலாற்றை மறைப்பதற்குப் பதிலாக அதை வெளிப்படையாக நினைவுகூர வேண்டும் என்று ஹோலோகாஸ்ட் நினைவு அமைப்புகள் உள்ளிட்ட சில தரப்பினர் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தின் பயன்பாடு மாற்றப்பட்டாலும், அதன் வரலாற்று முக்கியத்துவம் மாறாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அரபிக்கடலில் சரக்கு விமானம் மாயம்!

ஆடி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

கொங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடசாலையில் மாணவி வன்புனர்வு; சம்பவத்தை மூடி மறைத்த அதிபர், உப அதிபர்

ஆனி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பங்களாதேஷில் அம்மை நோயினால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

சித்திரை 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube