Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

16 வயதிற்குட்பட்ட சிறுமி ஒருவரைப் பாலியல் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு, மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தலா 10 ஆண்டுகள் வீதம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளி நீதிமன்றத்தில் சமுகமளிக்காத நிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட சிறுமி இச்சம்பவத்தினால் கர்ப்பமடைந்ததும், அச்சிறுமியின் அறிவின்றியே அவரைச் சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மாதக் கருவைக் கலைத்ததும் சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

மேலும், சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றிய சந்தேகநபர், தற்போது பிரான்ஸ் நாட்டில் தலைமறைவாக உள்ளதாக அறியப்படுவதால், அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம், இது குறித்து பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் கட்டளையிட்டது.

இவ்வழக்கில் அரச தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மூவர், அனைத்துச் சாட்சியங்களையும் மிகக் குறுகிய காலத்திற்குள் நீதிமன்றத்தில் நெறிப்படுத்தி, குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து இவ்வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டு வந்து சந்தேகநபருக்குக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏமாற்று வாக்குறுதிகள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இத்தீர்ப்பு ஒரு பலத்த எச்சரிக்கையாக அமையும் என்பதோடு, சந்தேகநபர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் உணர்த்தியுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல்: 24 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியீடு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் மீண்டும் தீ விபத்து: இரண்டு கடைகள் சேதம் – தொடரும் பொருளாதார இழப்புகள்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசேட சந்திப்பு

ஆடி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube