Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விசேட சந்திப்பு

#HillCountry #Upcountry #Development #SriLanka #SundaralingamPradeep #Radhakrishnan #Infrastructure #CommunityDevelopment #NewsUpdate #BreakingNews

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் இன்று (08) நடைபெற்றது.

பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலையகப் பகுதிகளில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இதன்போது, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

மக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்றும், அவற்றின் சாதகமான பலன்கள் மக்களிடம் வெளிப்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், மலையக மக்களின் முன்னேற்றமே தமது முதன்மை நோக்கம் என்றும், மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மலையகத்தின் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு, மலையக அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய கலந்துரையாடலாக அமைந்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்வானிலை

களுகங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற உபசம்பதா விழா

ஆடி 9, 2026
இலங்கை

இலங்கையில் மே மாத சுற்றுலா வருகை புதிய சாதனை!

ஆனி 8, 2026
இலங்கை

மலையக மக்களுக்கு இந்தியக் குடியுரிமை – மனோகணேசன்!

சித்திரை 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube