Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவிலிருந்து ரூ.20 கோடிக்கும் மேற்பட்ட ஹஷிஷ் போதைப்பொருளுடன் கனேடியர் கைது!

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கனடாவிலிருந்து சட்டவிரோதமாக ரூ.20 கோடிக்கும் அதிக பெறுமதியான ஹஷிஷ் ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற 27 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணிகள் வருகை முனையத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டபோது, அவரது இரண்டு பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 பொதிகளில் இருந்து சுமார் 20 கிலோ 117 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை பெறுமதி சுமார் ரூ.20 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கனடாவின் டொரான்டோவில் இருந்து கட்டார், தோஹா வழியாக கட்டார் எயர்வேஸ் விமானத்தில் இலங்கைக்கு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் 42,807 பாதிப்பு!

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகரெட் வரியால் ரூ.25 பில்லியன் இழப்பு!

ஆடி 15, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கொளத்தூர் சட்டமன்றத் தேர்தல் – மு.க.ஸ்டாலினின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நான் போர் குற்றவாளி அல்ல – சவேந்திர சில்வா!

புரட்டாதி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube