Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்த வருடத்தின் இதுவரையான 7 மாதங்களில் 258 தீவிபத்துகள் பதிவு

ஆடி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தம் 258 தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் கொழும்பு தீயணைப்புப் படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தீ விபத்துகள் தொடர்பில் 17 மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் படைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 382 தீ விபத்துச் சம்பவங்களும், 46 மீட்பு நடவடிக்கைகளும் பதிவாகியிருந்தன.

கடந்த ஆண்டு முழுவதுமே 382 சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே 258 சம்பவங்கள் பதிவாகியுள்ளது தீவிரமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தீ விபத்துகள் தவிர, வீதித் தடைகள், மரங்கள் முறிந்து விழுந்தமை மற்றும் வீதி விபத்துகள் தொடர்பான 13 அவசர உதவி அழைப்புகளுக்கும் தீயணைப்புப் படையினர் பதிலளித்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தீயணைப்புப் படைத் திணைக்களத்தின் விசாரணைகளில் இத்தீ விபத்துகள் அதிகரிப்பதற்கு வேலைத் தலங்களில் போதிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை, பல வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் முறையான தீயணைப்புக் கருவிகள் அல்லது பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமை காரணங்களாக காணப்படுகின்றன.

அதேவேளை, தீ விபத்து ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே அதைக் கட்டுப்படுத்தவோ அல்லது தீயணைப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கவோ தாமதிப்பது, வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தரமற்ற அல்லது முறையற்ற முறையில் மின் இணைப்புகளைப் பயன்படுத்துவது, நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையும் தீ பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குகிறது.

வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மின் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளில் பொதுமக்கள் மற்றும் உரிமையாளர்கள் அதிக அவதானத்துடன் செயல்படுமாறு தீயணைப்புப் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் 87 சதவீத மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தொற்று அச்சம் – கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் இணைய வழியில்!

ஆடி 13, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இனி பிரிட்ஜ்க்குள் இருக்கலாம் – ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு

ஆடி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2 மணிநேர பளு தூக்கும் பயிற்சி: ஆயுளை நீட்டிக்கும் எனப் புதிய ஆய்வில் தகவல்!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube