கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 1.48 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் விசித்திரமாக மறைத்துக் கொண்டு வர முயன்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் ஆவார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இன்று (27) காலை 9:25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேகநபரின் பயணப் பையை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சோதனையிட்டபோது, 1.480 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருளைச் சொக்லெட் வடிவில் உருட்டி, அதன் மீது சொக்லேட் பூச்சு பூசி, பிரபல சொக்லெட் பிராண்டின் பெயர் அச்சிடப்பட்ட பொதிகளுக்குள் அடைத்து மிகவும் நுட்பமாகக் கடத்தி வர முயன்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
