திருகோணமலை, குச்சவெளி, நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த (டச்சு) சுற்றுலாப் பயணி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நிலாவெலி பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த வேளையில், நேற்று (26) மாலை நிலாவெலி கடற்கரையில் நீராடச் சென்றதாகவும், அப்போது திடீரென கடலலையில் அடித்துச்செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் குச்சவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
